எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியில் "சான்றோர் சிந்தனை" எனும் நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.
இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெறுவதற்காக உயிரை வழங்குகிறான். வினைகளை நீக்கிடப் பிறவிப் பேற்றினை அருளுகிறான். தாயும், தந்தையும் இணையும்போது இறைவனுடைய திருவுள்ளப்படி கரு உருவாகிறது. அந்தக் கரு உயிருடன் கருப்பையில் பலத்த பாதுகாப்புடன் உடம்பினைப் பெற்று குழந்தையாகப் பிறந்து இந்த உலகிற்கு வருகிறது.
இதை மணிவாசகர் போற்றித் திரு அகவலில் சிறப்பாக விளக்குகிறார். அருவ நிலையில் தேவர்களாலும் காண முடியாத திருவடிகளை உயிர்கள் கண்டு வாழ்த்த எளிதாகும்படி சிவப்பரம்பொருள் உருவம் தாங்கி வருகிறார். இறைவனை வணங்கி மகிழப் பக்குவமாக வேண்டிய ஜீவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் அவரவர்கள் செய்தவினைகளுக்கு ஏற்ப யானை முதல் எறும்பு வரையுள்ள பல வடிவங்களில் பிறக்கின்றன. பிறகு மனிதப் பிறப்பு எடுக்கும்போது அந்தக் கருவானது கருப்பையில் உள்ள பல கிருமிகளின் தாக்குதலில் இருந்து மீண்டு பிழைத்து வளருகிறது.
ஒருமாதம் பூர்த்தியானதும் தனக்காக என ஒரு வடிவெடுக்கிறது. இரண்டு மாதம் நிறையும் பொழுது வலுப்பெறுகிறது. மூன்றாம் மாதத்தில் தாயின் கருவில் பெருகும் கொழுப்பு நீரில் புதையுண்டு போகாமல் உயிர் வாழ்கிறது. ஐந்தாவது மாதத்தில் கருக் கலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கிறது. ஆறாவது மாதத்தில் அந்தக் கருவுக்கு எல்லா அவயங்களும் முறையாக அமைகிறது. ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதத்தில் இயல்பாக ஏற்படும் பல துன்பங்களைக் கடந்து உயிருடன் இருக்கிறது.
பத்தாவது மாதத்தில் தகுதியுடன் கர்ப்பத்தில் வளர்ந்து, பிறக்கும்போது பிரசவ வேதனையில் தாயும் குழந்தையும் துன்பப்பட்டு குழந்தை பிறக்கிறது. கருப்பையில் வளரும் கருவுக்கு இறைவன் அதன் தொப்புள் கொடி மூலமாகத் தாயிடமிருந்து உணவு பெற்று வளரச் செய்கிறான். கருவிலுள்ள குழந்தை தன் இருகரம் கூப்பி இறைவனையே துதித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது மாதம் சூதக வாயு அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து இந்தப் பூவுலகத்தில் வந்து பிறக்குமாறு வெளியேற்றுகிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் "பிராணன் " என்ற வாயு சுவாசத்தை மேற்கொள்ளச் செய்கிறது. "அபானன்" என்ற வாயு அந்தக் குழந்தையின் வயிற்றிலிருந்து மலசலங்களை வெளியேற்றுகிறது. இதையே "காட்டு மலம்" என்பார்கள். உடனே அந்தக் குழந்தைக்குப் பசி ஏற்பட்டு "குவா ! குவா" என்று அழ ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. பிறந்த குழந்தையின் அழுகை அதன் தாய்க்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் கருவறையில் இருந்தபோதே இறை உணர்வுடையவராகத் திகழ்ந்தார். கருவின் உருவமற்ற நிலையிலும் எண்ணிய எண்ணமெல்லாம் இறைவனுடைய திருவடிகளே என்கிறார். உருவமும் பருவமும் அடையும் முன்பே கடவுளையே எப்போதும் நீக்கமற நினைத்தாராம் உருவு கொண்டு இவ்வுலகில் தோன்றிய போதும் இறைவனுடைய புகழைப் பல காலம் பயின்று வந்தார். அதுமட்டுமல்ல இறைவனை மறவாமல் இருக்க புறக்கோலத்திலும் "சிவாய நம" என்று திரு நீற்றினை அணிந்து வந்தார். என்னுடைய பிறவி நீங்க இறைவா தங்களையே அடைக்கலமாக நினைத்து இருக்கும் எனக்கு சிவகதி அருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.
மேலும் தாயின் கருவில் இருந்த காலத்தில் இருந்தே உன் திருவடியை என் மனம் சிந்தித்து வருகிறது. பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கும் எனக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. என் மீது இரக்கம் கொண்டு அருள் பாலிக்க வேண்டும் இறைவா! என்று வேண்டுகிறார். "கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தழிந்து எய்த் தொழிந்தேன்" என்கிறார்.
இந்த உடம்பை அருமையிலும் அருமையாக ஆக்கித் தந்து, இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து, நம்மை வாழவைக்கும் இறைவனின் பெருங்கருணையை நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து, அருளமுதே! நன்னிதியே! ஞான நடத்தரசே! என்னுரிமை நாயகனே என்று இறைவனைப் போற்றி வணங்கி வந்தால் இறைவன் நமக்கு சிவகதி என்னும் பெரும் பேற்றினை அருள்வான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025