முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு கேரள பயணத்தின் போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திடுக்கிடும் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் கேரளாவுக்கு சென்றிருந்தபோது அவருக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது என்று அந்த மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.பி.சென்குமார் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில துறைமுக நகர் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை அன்று அங்கு சென்றிருந்தார். மெட்ரோ ரயில் சேவையை துவக்கிவைத்து சிறிது நேரம் ரயிலில் சென்றார். அவருடன் கேரள முதல்வர் பினராய் விஜயன், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோரும் சென்றனர்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது அவருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டது என்று மாநில தலைமை போலீஸ் அதிகாரி டி.பி. சென்குமார் தெரிவித்தார் கொச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதை தெரிவித்தார். கொச்சியில் பிரதமரை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என்று கூறிய சென்குமார் அதற்குமேல் நாங்கள் விளக்கமாக கூறமுடியாது என்றார்.

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து விளக்கமாக கூறுமாறு நிருபர்கள் கேட்டதற்கு சென்குமார் விளக்கமாக கூறமுடியாது என்று திரும்பவும் பதில் அளித்தார். கடந்த சனிக்கிழமைக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று கொச்சியில் உள்ள ஐகோர்ட்டுக்கு அருகில் புத்துவைப்பக்கு அருகில் எல்பிஜி டெர்மினல் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது சரிதான் என்றும் சென்குமார் தெரிவித்தார். அந்த வழியாகத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாதுகாவலர்களும் காரில் வர இருந்தனர். இதற்கு இடையூறு செய்யும் வகையில் அந்த கும்பல் செயல்பட திட்டமிட்டிருந்தது. மேலும் அந்த பாதையில்தான் அதிரடி போலீசார் மற்றும் இதர பாதுகாப்பு படையினர் சேர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட கொச்சி நகர துணை போலீஸ் கமிஷனர் யதீஷ் சந்திரா மீது எந்தவித தவறும் இல்லை. தர்ணா போராட்டம் நடத்தியவர்களுக்கு பின்னணியில் தீவிரவாத சக்திகள் இருந்துள்ளன. அதனால் தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது சரிதான் என்று சென்குமார் மேலும் கூறினார்.

தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்குமார் இதை தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து