முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரிவிதிப்பானது நுகர்வோர்கள்-வர்த்தகர்களுக்கு நீண்டகால பயன் அளிக்கும்: வெங்கய்யா நாயுடு உறுதி

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் நுகர்வோர்களும் வர்த்தகர்களும் நீண்டகால அடிப்படையில் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உறுதிபடக்  கூறினார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி வரும் 30-ம் தேதி இரவு நள்ளிரவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அனைத்துக்கட்சிகள் எம்.பி.க்கள் அடங்கிய கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தநிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று ஐதராபாத் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது கூறுகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். போகப்போகத்தான் அது நல்லது என்று தெரியும். நுகர்வோர்களுக்கும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு நீண்டகால அடிப்படையில் பயனுள்ளதாக இருக்கும். இந்திய சுதந்திர வரலாற்றில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது மிகப்பெரிய மறைமுகமான வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தமாக இருக்கும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பெரிய அளவில் சீர்திருத்தத்தையும் மாற்றத்தையும் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அதன் ஒரு முயற்சியாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் எதுவும் வெளிப்படையாக இருக்கும். பெரும் மாற்றமும் ஏற்படும். பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும். நாட்டையும் பலப்படுத்தும் என்று வெங்கய்யா நாயுடு கூறினார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விவசாயத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் இருக்காது. சோதனை சாவடிகளும் இருக்காது. பணவீக்கத்தை குறைக்கும். விலைவாசிகள் குறையும். வர்த்தக முறையை எளிதாக்கும். நீண்டகால அடிப்படையில் பொருளதார வளர்ச்சி ஏற்படும். உலகில் ஏற்கனவே 142 நாடுகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமுலில் உள்ளது. இந்தியா ஒரு பெரியா நாடாகும். மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு.  அதனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வித்தியாசமானதாக  இருக்கும் என்று அமைச்சர் வெங்கய்யா நாயுடு மேலும் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து