ஜனாதிபதி பதவிக்கு போட்டி கொள்கை- கோட்பாடு அடிப்படையில் நடக்கிறது: சோனியா காந்தி பேட்டி

புதன்கிழமை, 28 ஜூன் 2017      அரசியல்
sonia gandhi(N)

புதுடெல்லி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியானது கொள்கை மற்றும் கோட்பாடு அடிப்படையில்தான் நடக்கிறது. அதன்பேரில்தான் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து போட்டி வேட்பாளரை நிறுத்தியுள்ளன என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று கடைசிநாளாகும். கடைசி நாளன்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள லோக்சபை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் மனுத்தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தும்,எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாரும் தலித் பிரிவை சேர்ந்தவர்கள். அதனால் ஒரு சிலர் சாதி அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தநிலையில் மீராகுமார் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சோனியா காந்தி, குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் ஜனாதிபதி பதவிக்கு  கொள்கை, கோட்பாடு அடிப்படையில்தான் போட்டி  நடக்கிறது. அந்த அடிப்படையில்தான் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து வேட்பாளரை நிறுத்தியுள்ளன என்றார்.

மீராகுமார் வேட்புமனுத்தாக்கல் செய்தபோது முன்மொழிந்தவர்களில் சோனியாவும் ஒருவர். ஜனாதிபதி தேர்தலில் மீரா குமார், தகுதி, தரத்தின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளார். நாடும், நாட்டு மக்களும் இது ஒருங்கணைக்கிறது என்று இத்தாலியில் தனது தாய்வழிப்பாட்டி வீட்டில் ஓய்வு எடுக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். வித்தியாசமான கோட்பாடுகளுக்கு எதிராக மீரா குமார் போட்டியிடுகிறார். அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார்.   

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து