எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இந்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. கடந்த டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இதனையடுத்து , டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்தது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


