ஆக்ஸ்போர்டு பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருநெல்வேலி

தென்காசி குத்துக்கல்வசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது.

 பயிற்சி முகாம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார்.மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஈரோடு கதிர் பேசினார். மேலும் மாணவ, மாணவிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகுவது, மன அழுத்தம் குறைப்பது, மன சோர்வை போக்குவது குறித்த சிறு கதைகள், பாடல்கள், குறு நாடகங்கள் குறுந்திரையில் திரையிடப்பட்டது. உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து