ஓசூர் காமாட்சி அம்மன் கோவிலில் குழந்தைகள் அபிசேகம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      கிருஷ்ணகிரி
kamatchiamman temple 2017 07 02

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் 19 ம் ஆண்டு வருஷபிசேகம் நடைபெற்றது.

 அபிசேகம

இந்த கோவிலில் 5 வயதிற்குட்பட்ட ஆண்,பெண் குழந்தைகள் செய்யும் அபிசேக நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் அபிசேகம் செய்தால் குழந்தைகளுக்கு திருஷ்டி,பயம் போன்றவைகள் இருக்காது என்பது நம்பிகை. மேலும் திருமணத்தடை நீங்க விரைவில் திருமணம் நடக்க எல்லா நாட்களிலும் 25 கிராம் ஏலக்காய் மாலை அணிவிக்கலாம் .   இந்த கோவிலில் அனைத்து  விசேச நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகிறது. குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் அபிஷேகம் நடத்துவார்கள். அதுப்போலவே இந்த வருடமும் சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அபிசேகம் நடத்தினார்கள். தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் அம்மனுக்கு குழந்தைகள் கையில் அபிசேகம் நடத்தப்படுகிறது


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து