பழனிக்கு செல்லும் வழியில் முருகப்பெருமான் ஓய்வு பெற்ற திருத்தலம்

வியாழக்கிழமை, 6 ஜூலை 2017      ஆன்மிகம்
kumaragiri 0

குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. சுமார் 700 படிக்கட்டுகளைக் கொண்ட கோவில் ஆகும்.

விநாயகப்பெருமான் தங்களது பெற்றோர்களிடம் மாங்கனியை பெற்றுக்கொண்டதின் காரணமாக முருகப்பெருமான் கோபித்துக் கொண்டு பழனிக்கு செல்லும் வழியில் இத்திருத்தலத்தில் சிறிது நேரம் மயில் வாகனத்துடன் ஓய்வு எடுத்துச் சென்றதாக கூறுகிறார்கள். பிற்காலத்தில் பழனிக்கு செல்ல இருந்த பக்தர் ஒருவர் குமரகிரி குன்றில் சிறிய நேரம் தங்கினார். அப்பொழுது “தண்டாயுதபாணியாக நான் இங்கு குடி கொண்டிருக்கிறேன்” என ஒரு அசரீரி ஒலித்தது. அதைக்கேட்டபக்தர்ஒன்றும் புரியாமல் பழனிக்குச் சென்றார். பழனியில் முருகன் பக்தர் முன் தோன்றி ஒரு திருவோட்டைக் கொடுத்து குமரகிரி குன்றில் அசரீரி ஒலித்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி கூறினார். பக்தர் தான் பெற்ற திருவோட்டின் மூலம் கிடைத்த காணிக்கையை வைத்து குமரகிரி குன்றில் தண்டாயுதபாணிக்கு ஒரு கோவில் அமைத்தார்.

மாங்கனிக்காக கோபித்துக் கொண்டு இங்கு வந்த தண்டாயுதபாணிக்கு நைவேத்யமாக மாம்பழங்களை படைத்து வழிபாடு நடத்துகின்றனர். இத்தலம் தியானம் செய்வதற்கு மிகச்சிறந்த அமைதியான இடமாகும். தண்டாயுதபாணி மலைக் குன்றின் மீது தண்டத்துடன் (குபேர திசை) வடக்கு திசை நோக்கி அருள்பாளிக்கிறார். பிரகாரத்தில் துர்க்கை அம்மன், ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் அவசர சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் இத்தலத்திற்கு வந்து இக்கோவிலில் கிடைக்கும் அரிச்சி மலருடன் ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் கலந்து திரிசதை அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைகின்றனர். குமரகிரி தண்டாயுதபாணியை வணங்கி சென்றால் விபத்தில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். மேலும் வாகனம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து செல்கின்றனர். தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியமும், தடைபட்ட திருமணங்களும் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தண்டாயுதபாணிக்கு நேர்த்திகடனாக முடி இறக்குதல், காவடிஎடுத்தல், பால்குடம் எடுத்தல், சேவல் காணிக்கை செலுத்துதல் போன்றவையும் நிறைவேற்றப்படுகிறது. இத்திருக்கோவில் காலை 6 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து