முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   களப்பணியாளர்கள் மேற்கொள்ளப்படும்,  டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்புப்பணிகளைநேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.                                           

 தடுப்பு பணிகள்

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மாடன்விளை, தலக்குளம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புதுவிளை, நெய்ய+ர் பேரூராட்சிக்குட்பட்ட முரசங்கோடு, திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நடுநேரி, திங்கள்நகர் குழந்தைகள் மையம், இரணியல் பேரூராட்சிக்குட்பட்ட மேலத்தெரு, வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்ட மாடதட்டுவிளை, வில்லுகுறி காலனி மற்றும் வில்லுகுறி அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற பகுதிகளில், களப்பணியாளர்கள் மேற்கொள்ளப்படும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்புப்பணிகளை  நேரில் சென்று  பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர், பொதுமக்களிடம், களப்பணியாளர்கள் மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்து கேட்டறிந்தார்.  மேலும், குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் தங்களது வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், உபயோகப்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்திட வேண்டும்.  குறிப்பாக, களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும்போது, வர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின் போது, முதன்மை ச்சியியல் வல்லுநர் மரு. முகமது அப்துல் காதர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. எம். மதுசூதனன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (பொ)) எ.என்.எஸ். மேரி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் லிபிமெர்சிலின்,  குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் மரு. பிரதீப், செயல் அலுவலர்கள்  கணேசன் (ரீத்தாபுரம் பேரூராட்சி), ஜெயமாலினி (திங்கள்நகர் பேரூராட்சி), வினிதா (வில்லுகுறி பேரூராட்சி),  மகாராஜா (இரணியல் பேரூராட்சி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து