முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத்கவுர்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத்கவூர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது தொடர்பாக ஆசிய தடகள போட்டியில் அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய தடகளத்தில் தங்கம் ...

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை மன்பிரீத்கவூர். குண்டு எறியும் போட்டியில் பல்வேறு முத்திரைகளை பதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில் மன்பிரீத்கவூர் தங்கம் வென்று இருந்தார்.

ஊக்க மருந்து சோதனை

இந்த நிலையில் மன்பிரீத் கவூர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்தது. ஜூன் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பாட்டியாலாவில் நடந்த பெடரேசன் கோப்பை போட்டியின் போது அவரது சிறுநீர் மாதிரி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில்தான் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. 2-வது கட்ட பரிசோதனையிலும் மன்பிரீத்கவூர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் ஆசிய தடகள போட்டியில் அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்படும். மன்பிரீத்கவூர் ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம் இந்திய தடகள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து