முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் - அமெரிக்கா பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அமெரிக்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாதுகாப்பான புகலிடம் ...

பயங்கரவாதம் குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை தயார் செய்துள்ளது. அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள அதில், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

நடவடிக்கை இல்லை

அந்த அறிக்கையில், ‘‘பாகிஸ்தானுக்குள்ளேயே தாக்குதல் நடத்தும் தெரிக்–இ–தலீபான் போன்ற அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால், பிற நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆப்கன் தலீபான், லஸ்கர்–இ–தொய்பா, ஜெய்ஸ்–இ–முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

இந்தியாவுக்கு பிரச்சனை

அந்த அமைப்புகள், பாகிஸ்தானில் தொடர்ந்து இயங்குவதுடன், பயிற்சி அளித்தல், நிதி திரட்டுதல் உள்ளிட்ட காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இந்தியா நாசவேலைகளை சந்தித்து வருகிறது’’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஹக்கானி நெட்வோர்க்

தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் துணை இயக்கமான ஹக்கானி நெட்வோர்க் ஆப்காகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்கிறது. அமெரிக்காவின் பார்வையில் இந்த பயங்கரவாத இயக்கம் முதலிடம் பிடித்து உள்ளது. ஆனால் அந்த பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட ஹக்கானி நெட்வோர்க் அமைப்பு செயல்பட்டு வருவதையும் அமெரிக்கா தன்னுடைய அறிக்கையில் சுட்டி காட்டிஉள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஐ.நா. பாதுகாப்பு சபையால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவன். அவன் பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறான். அவனை காவலில் வைத்து உள்ளதாக பகிஸ்தான் தெரிவித்து உள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா சாட்டையை சுழட்ட தொடங்கும் விதமாக அறிக்கையில் சாடிஉள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து