முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட்போனில்ஆதார் அட்டை: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் எம்ஆதார் செயலி வெளியீடு

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஆதார் அட்டையை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்லும் நோக்கில் எம்ஆதார் எனும் செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆதார் அடையாள அட்டையை மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் எடுத்துச் செல்லும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்ஆதார் எனும் புதிய செயலியை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையை ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டல் காப்பியாக வைத்திருக்க முடியும். இதனால் கையில் எந்நேரமும் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

டவுன்லோடு ...

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் டவுன்லோடு செய்ய முடியும். இந்த செயலியின் ஐஓஎஸ் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதலில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஆதார் புரோஃபைல்களை டவுன்லோடு செய்யலாம்.

தகவல்களுக்கு பாதுகாப்பு

இந்த செயலியில் 'பயோமெட்ரிக் லாக்கிங்' மற்றும் 'பயோமெட்ரிக் அன்லாக்கிங்' ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. அன்லாக் அம்சம் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது, லாக்கிங் அம்சத்தை டிசேபிள் செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போன் தொலைந்தாலும் உங்களது பயோமெட்ரிக் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

ஒன்-டைம் பாஸ்வேர்டு

எம்ஆதார் செயலி TOTP அல்லது டைம்-பேஸ்டு-ஒன்-டைம்-பாஸ்வேர்டினை பயன்படுத்துகிறது, இது ஆதார் சார்ந்த ஆத்தென்டிகேஷனை எஸ்எம்எஸ் சார்ந்து வெரிஃபை செய்யும். வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் புரோஃபைலில் மாற்றங்களை செய்து அவற்றை சேமிக்க முடியும். இந்த செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஆதாருடன் வழங்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்க வேண்டும். செயலியை இயக்க ஏற்கனவே பதிவு செய்த ஒன்-டைம் பாஸ்வேர்டு கொண்டு இயக்க முடியும். ஒரேவேலை மொபைல் நம்பரை அப்டேட் செய்யாதவர்கள் அருகாமையில் உள்ள மொபைல் அப்டேட் என்ட் பாயிண்ட் அல்லது என்ரோல்மென்ட் சென்டர் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து