முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ரோஸ் சாதனை இருந்தும் வொர்செஸ்டர்ஷைர் அணி தோல்வி

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : 20 ஓவர் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ரோஸ் ஒயிட்லே சாதனை படைத்தார். இருந்தாலும் அந்த அணி தோல்வி அடைந்தது

2017 நாட்வெஸ்ட் 20 ஓவர் ’

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் 20 ஓவர்  தொடர் போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் 20 ஓவர் ’ போட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணியும் யார்க்க்ஷைர் அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய யார்க்க்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த டேவிட் வெல்லே 118 ரன்கள்  எடுத்தார்.

234 ரன்கள் இலக்கு ...

234 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வொர்செஸ்டர்ஷைர் அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியை சேர்ந்த ரோஸ் ஒயிட்லே என்பவர் 20 ரன்கள்  எடுத்திருந்த நிலையில் 16ஆவது ஓவரை வீச வந்த கார்வரின் பந்தை எல்லா பக்கமும் சிதறடித்தார். அவர் வீசிய 6 பந்துகளிலும் 6 சிகஸர்களை அடித்து ரோஸ் ஒயிட்லே சாதனை படைத்தார். 26 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அவரின் வெறித்தனமான ஆட்டம் அணிக்கு கைக்கொடுக்கவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து