முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை காஜல் மேலாளர் கைது

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

ஐதராபாத், போதைப்பொருள் வைத்திருந்த தாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோனி என்பவரைக் கலால்துறை அதிகாரிகள் நேற்று கைதுசெய்தனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யும் கும்பலைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கொடுத்த தகவலின்படி, இது தொடர்பாக தெலுங்கு திரைத்துறையைச் சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதில் இயக்குநர் பூரி ஜெகன் நாத், நடிகர்கள் தருண், சுப்பராஜு, நவ்தீப் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு ஆகியோரிடம் கலால் புலனாய்வு துறை அதிகாரி கள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இவர்களி டமிருந்து ரத்தப் பரிசோதனை உட் பட நகம், தலைமுடி பரிசோதனை யும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே நேற்று நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோனி என்பவரின் வீட்டில் கலால் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரோனி கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே நடிகைகள் ராசி கண்ணா, லாவண்யா திரிபாதி ஆகியோரிடம் மேலாளராகப் பணியாற்றி உள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் வழக்கில் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகை சார்மிக்கு கலால்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நடிகை சார்மி சார்பில் நேற்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், ‘போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜராவோரிடம் ரத்த பரிசோதனை செய்ய வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது. 11 முதல் 13 மணி நேரம் ஒரு குற்றவாளி போல விசாரணை நடத்துவதும் சரியல்ல. இது குறித்து கலால் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், கலால்துறை அதிகாரிகள் சந்திரவதன், அகுன் சபர்வால் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து