முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கலெக்டர் வீரராகவராவ் தகவல்

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-தமிழகஅரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், திட்டங்கள்  குறித்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் இன்று (01.08.2017) மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் கிராமத்தில் செய்தியாளர்கள் பயணம் இன்று (01.08.2017) நடைபெற்றது. 
  இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர்    கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தெரிவித்ததாவது:
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் சக்கிமங்கலம் ஊராட்சியில் 20 அம்மா பூங்கா அமைக்கும் பணிகள் ரூ.4 கோடி மதிப்பிலும், 20 அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பிலும், ரூ.6.55 கோடி மதிப்பில் 43 நுண்ணிய சொட்டுநீர் நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளும், ரூ.5.31 கோடி மதிப்பில் அடிப்படை தேவைக்கான பணிகளும், ரூ.8.79 கோடி மதிப்பில் 32 சாலைகள் அமைக்கும் பணிகளும் தாய் திட்டம் ஐஐன் கீழ் நடைபெற்று வருகிறது.
  ரூ.13.60 கோடி மதிப்பில் 648 பசுமை வீடு கட்டும் பணிகளும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.51.44 கோடி மதிப்பில் 3026 வீடுகள் கட்டும் பணிகளும், தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.81 கோடி மதிப்பில் 76 தார்சாலை அமைக்கும் பணிகளும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.21.21 கோடி மதிப்பில் 24 தார் சாலை அமைக்கும் பணிகளும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்காக ரூ.110.20 கோடி மதிப்பில் 91839 தனிநபர் இல்லக்கழிவறைகளும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பில் 302 குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கும் கூடங்கள்; அமைக்கும் பணிகளும்,
  விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.05 கோடி மதிப்பில் 281 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பில் 48 பணிகளும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்;ச்சித்தி;ட்டத்தின் கீழ் ரூ.15.72 கோடி மதிப்பில் 161 பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.28 கோடி மதிப்பில் 336 பணிகளும், 14வது நிதிக்குழு தண்ணீர் விநியோக திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் 474 பணிகள் உள்ளிட்ட 97975 பணிகள் சுமார் ரூ.308.56 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்;டம் 2016-17ன் கீழ் 17365563 மனித சக்தி நாட்களுக்கு ரூ.188.85 கோடியும், 2017-18ல் இதுவரை 4242547 மனித சக்தி நாட்களுக்கு ரூ.61.68 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பில் 2016-17ல் 229986 மனித சக்தி நாட்களுக்கு ரூ.4.66 கோடியும், 2017-18ல் 62111 மனித சக்தி நாட்களுக்கு ரூ.1.27 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்காக அனைத்து பகுதிகளிலும் மரம் நடும் பணிகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மரம் நடுவது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மதுரை திகழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.   இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2016-17ன் கீழ் சக்கிமங்கலம் ஊராட்சி, பசும்பொன் நகரில் ரூ.29.62 இலட்சம் மதிப்பில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கும் பணிகளையும்,  ரூ.90,000 மதி;ப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிப்பு கூடத்தினையும், ரூ.23.80 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் மற்றும் நர்சரி பணியினையும்,  ரூ.20 இலட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கும் பணியினையும், ரூ.10 இலட்சம் மதிப்பில் அம்மா உடற் பயிற்சிக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.14.10 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பெனடிக் தர்மராய், மதுரை கிழக்கு வட்டாட்சியர் கருப்பையா, மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சூரியகாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து