முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் போட்டி

சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் போட்டியிட உள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அதிபர் விளாடிமிர் புடின் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது ஒருவர், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று புடினை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த புடின், உங்களின் விருப்பத்தை பரிசீலனை செய்கிறேன் என்றார். இதுகுறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியபோது, அதிபர் தேர்தலில் புடின் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்தன. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80 சதவீத மக்கள் புடினுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து