இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      தமிழகம்
India-Fishermen 2017 6 18

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

அத்துமீறல்கள்...

இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை நாசம் செய்வது உள்ளிட்ட அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை எல்லைத்தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.


மீனவர்கள் அச்சம்...

செவ்வாய் கிழமை ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்துள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது போன்று விடுவித்து விட்டு, மீண்டும் கைது செய்வதாக இலங்கை கடற்படை மீது மீனவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து