முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு தீவிரவாத இயக்கம்: அமெரிக்கா அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து  அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் இந்திய மற்றும் இமாலய பகுதிகளில் அதிகரித்து வருவதையடுத்து. அந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன்
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு காஷ்மீரிலுள்ள மிகப் பெரிய தீவிரவாத அமைப்பாகும். இதன் தலைவர் சையத் சலாஹுதின் ஆவார். ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் உள்நாட்டிலிருந்து உருவானவர்கள்தான், இது பல ஆண்டுகளாக தனி காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைவதற்காக போராட்டங்கள் செய்து வருகிறது.

இந்தியாவின் பதான்கோட் ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலுக்கு சலாஹுதின் வெளிப்படையாகவே பொறுப்பேற்றார். தற்போது சலாஹுதின் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என்று சையத் சலாஹுதின் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து