முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்!

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

873 புள்ளிகளுடன் ...

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஹசில்வுட் ...

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார். சிறந்த ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இலங்கை அணி 88 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து