முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெய்ல், சாமுவேல்ஸ்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

டிரினிடாட், : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெய்ல், சாமுவேல்ஸ் இடம்பிடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டி ...

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் செப்டம்பர் 11-ந் தேதி முடிவடைகிறது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி, அயர்லாந்து அணியுடன் ஒரு ஒருநாள் போட்டியில் (செப்டம்பர் 13-ந் தேதி) விளையாடுகிறது.

மீண்டும் இடம் ...

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் செப்டம்பர் 19-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

கடைசியாக கெய்ல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், சாமுவேல்ஸ் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தனர். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு இருவரும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள்:

சுனில் அம்ரிஸ், தேவேந்திர பிஷோ, மிகுல் கம்மின்ஸ், கிறிஸ் கெய்ல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், இவின் லீவிஸ், ஜாசன் முகமது, ஆஷ்லே நர்ஸ், ரோவ்மன் பவெல், சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து