முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் .வெங்கடாசலம் தலைமையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

  தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ) மாவட்ட ஆட்சித்தலைவர்    ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திட பொதுமக்களுக்கு மருத்துவ துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.
வடகிழக்கு பருவமழைக்காலங்களில் தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகள் மற்றும் விஷ பூச்சிகளின் மூலம் ஏற்படும் நோய்களை தடுத்திட மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதா என்பதனையும், மருத்துவ உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குதலை உறுதி செய்தல், குளோரின் ஏற்றம் செய்தல், தண்ணீர் மாசுபடுவதை தடுத்தல், நடமாடும் மருத்துவ வசதி  போன்ற பணிகளை மேற்கொள்ள  வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத் ்க வேண்டும். மேலும், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சுகாதாரத்துறையினருடன் இணைந்து வடகிழக்கு பருவமழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் பராவமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்   இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.செல்வராஜ்   துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து