முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து விற்பனை தொடர்பான வழக்கு: நடிகை விஜயசாந்தி நேரில் ஆஜராக உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : சொத்து விற்பனை தொடர்பான வழக்கில் நடிகை விஜயசாந்தி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை விஜயசாந்திக்கு சொந்தமான அசையா சொத்துக்களை எழும்பூரைச் சேர்ந்த இந்தர்சந்த் ஜெயினுக்கு ரூ.5.20 கோடிக்கு கடந்த 2006-ல் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த சொத்துக்கான விலையில் ரூ.4.68 கோடியை விஜயசாந்தி தன்னிடம் பெற்றுக்கொண்டு, வேறு ஒருவருக்கு அந்த சொத்தை விற்றுவிட்டார் எனவும் அதனால் விஜயசாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தர்சந்த் ஜெயின் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் இந்தர்சந்த் ஜெயின் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.இந்நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்தர்சந்த் ஜெயினும், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகை விஜயசாந்தியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பும் சமரசமாக செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 18-ம் தேதி விஜயசாந்தி நீதிமன்றத்தில் ஆஜரானால் உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து