முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டி கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தர வரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

துபாய் : டி-20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

டி-20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி அணிகள் தர வரிசையில் நியூசிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் அணி (121 புள்ளிகள்) 2–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 2–வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி (119 புள்ளிகள்) 4–வது இடத்துக்கு சரிந்துள்ளது. 4–வது இடத்தில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணி (120 புள்ளிகள்) 3–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

இந்திய அணி (116 புள்ளிகள்) 5–வது இடத்தில் தொடருகிறது. பேட்ஸ்மேன் தர வரிசையில் இந்திய வீரர் விராட்கோலி (826 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். பந்து வீச்சு தர வரிசையில் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் (742 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (737 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 2–வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் (719 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 3–வது இடம் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து