முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய விழிப்புணர்வு நடைப்பயணம்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன்  ்கோயில் கிழக்கு கோபுரம் அருகே சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நிலையான சுற்றுலா – வளர்ச்சிக்கு ஒரு காரணி  என்ற கருப்பொருளை மையமாக வைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரம்பரிய விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,   கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 உலக சுற்றுலா அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் 1970-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த அமைப்பில் 150 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இந்த அமைப்பு செப்டம்பர் 27-ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் சுற்றுலா தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதால் சமூக, மொழி, கலாச்சார நல்லிணக்கத்திற்கு வழி வகுப்பதோடு ஒரு நாட்டிற்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தந்து ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்கு வழிவகை செய்கிறது.
 வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய கருத்தினை வலியுறுத்தி இவ்விழா உலகளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  2017ஆம் ஆண்டு உலக சுற்றுலா அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து தலைப்பு நிலையான சுற்றுலா – வளர்ச்சிக்கு ஒரு காரணி (ளுரளவயiயெடிடந வுழரசளைஅ – ய வழழட கழச னுநஎநடழிஅநவெ) ஆகும் என தெரிவித்தார்.
 முன்னதாக சுற்றுலா மற்றும் மேலாண்மை கல்வி பயிலும் ஆல்பா உணவக கல்லூரி, அன்னை பாத்திமா உணவக கல்லூரி மற்றும் ஓரியண்டல் உணவக கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொல்லியல்துறை உதவி இயக்குநர், சுற்றுலா தொழில் முனைவோர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், சுற்றுலா ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த பாரம்பரிய விழிப்புணர்வு நடைப்பயணமானது அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்  ்கோயிலின் கிழக்கு கோபுரம் அருகில் துவக்கி வைக்கப்பட்டு நகரத்தார் மண்டபம் - விட்டவாசல்  ்தேர் - விளக்குத்தூண் ஆகியவற்றின் வழியாகச் சென்று புராதனச் சின்னங்களையும், பழைமையான கட்டிடங்களையும் கண்டுகளித்து அவற்றின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு இறுதியாக மன்னர்  லை நாயக்கர் அரண்மனையினைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மன்னர்  லைநாயக்கர் மஹாலில் தூய்மையே சேவை உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர்  அனீஷ் சேகர், பயிற்சி ஆட்சியர்  ரஞ்சித் சிங், மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு.ஸ்ரீபாலமுருகன், உதவி திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், சுற்றுலா ஆர்வலர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து