முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இருந்து 15 கியூபா தூதர்கள் வெளியேற்றம்

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரக அலுவலகங்களில் பணிபுரியும் 15 அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இத்தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே 45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவு ஏற்பட்டது. இந்த நிலையில் கியூபா தலைநகர் ஹவான்னாவில் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலவித மர்ம நோய்களால் அவதிப்பட்டனர். இது கியூபாவின் சதி செயல் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அதன் மீது நடவடிககை எடுக்கவில்லை என தெரிவித்தது.

அதை தொடர்ந்து கியூபாவில் உள்ள அமெரிக்க தூதர்கள் மற்றும் ஊழியர்கள் வாபஸ் பெறப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரக அலுவலகங்களில் பணிபுரியும் 15 அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இத்தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர் சன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து