சாலை ஓரம் உபயோகமற்ற வாகனங்கள் நிறுத்தி உள்ளதை 1 வாரத்தில் அகற்ற வேண்டும்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் டெங்கு நோய் பரவாமல் தடுக்க பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடவடிக்கை

 நிலவேம்பு குடிநீர் அனைத்து அம்மா உணவகங்களிலும், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து மண்டலங்களிலும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்த கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளித்தல், கைத்தெளிப்பான், புகைப்பரப்பும் எந்திரம் மற்றும் வாகனம் மூலம் புகை பரப்பும் பணியும் நடைபெற்று வருகின்றது. டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில் தான் உற்பத்தியாகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் பொருட்களை அகற்றுமாறு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆகியவை பல வருடங்களாக உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு மூல காரணமாக அமைகிறது என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் தெரியவருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால், அதில் மழைநீர் தேங்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அதனைத் தடுத்திட வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறினால் பெருநகர சென்னை மாநகராட்சி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து