விஐடியில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய 3 நாள் சர்வதேச கருத்தரங்கம்: டோக்கியோ பல்கலை. பேராசிரியர் யோசிடகா ஒகாடா தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      வேலூர்
VIT

விஐடி பல்கலைக்கழகத்தில் நாட்கள் நடைபெறும் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கை ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் யோசிடாக ஒகாடா தொடங்கி வைத்தார்.இதில் கருத்தரங்கு மலரை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார்.

கருத்தரங்கம்

விஐடி பல்கலைகத்தின் ஸ்கூல் ஆப் அட்வான்சுடு சயின்ஸ் சார்பில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் நாட்கள் நடைபெறுகிறது.இதில் ஜப்பான் போலந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களின் பேராசிரியர்கள் பங்கேற்று மூலப்பெருட்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்துகின்றனர்.

மேலும் இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர் மென்படலம் (thin-film technology) தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கருத்தரங்கு தொடக்க விழா விஐடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ்.கலைநாதன் வரவேற்றார்.கருத்தரங்கின் நோக்கம் பற்றி கருத்தரங்கு அமைப்பாளர் முனைவர் ஏ.ரூபன் குமார் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர்டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து கருத்தரங்கு மலரினை வெளியிட்டு பேசியதாவது: அன்றாட மனித வாழ்க்கையில் மூலப்பொருட்களின் பங்களிப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.குறிப்பாக உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவம் தொழிற்சாலை மற்றும் வின்வெளி ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர், மென்படலம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. நானோ தொழில்நுட்பம் மூலம் பெரிய அளவில் மூலப்பொருட்கள் மற்றும் டிவைசஸ்கள் உருவாக்க முடியும்.அதோடு உலகலாவிய பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்.

கண்டறிய வேண்டும்

மேலும் மென்படலம் தொழில்நுட்பத்தின் எலக்ட்ரானிக் செமிகன்டக்டர் டிவைசஸ் சர்கியூட் சிப்ஸ் மைக்ரோ பேப்ரிகேடட் மெக்கானிசம் மைக்ரோ எலக்ட்ரோமெக்கானிக்கல் சிஸ்டம் ஆகியவற்றுக்கு பயனுள்ளதாக அமைகிறது.நானோதொழில்நுட்பம் இலகுரக வானுர்திகள் உருவாக்கவும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலைகளின் கழிவுகளை அற்றவும் கழிவு நீரை சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றவும் பயன்படுகிறது இதே போன்று மேலும் பல்வேறு பணிகளுக்கு இந்ததொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இக்கருத்தரங்கில் கண்டறிய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேனைவர் யாசிடாகா ஒகாடா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: 21ம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நமது வாழ்க்கையை மேல் நேக்கி கொண்டு செல்ல உதவுவதாக உள்ளது. 2.008 கணக்குப்படி உலகமக்கள் தொகை 650 கோடியாகும் இது கடந்த 40 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இன்னும் 40 ஆண்டுகளிள் இந்த எண்ணிக்கை 900 கோடியாக உயரும். எனவே அதற்கு ஏற்ற வகையில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாய தேவைகளின் அளவை நாம் அதிகரிக்க வேண்டிய நிநிலையில் நாம் உள்ளோம். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற்கொண்டுள்ள முன்னணி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் இதற்கான புதிய வழிகள் காண முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதில் ஆஸ்திரேலியன் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்.ஹோ டான் ஜப்பான் அகிட்டா பிரிபெக்சர் பல்கலைகழக பேராசிரியர் புமியோ ஹமடா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பி.ராமசாமி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் விஐடி பேராசிரியர்கள் கிரிஷ்.எம்.ஜோஷி எம்.மாலதி டபிள்யு.மாதுரி ஆகியோர் பங்கேற்றனர்.முடிவில் பேராசிரியர் ரவி சங்கர் பாபு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து