தென் பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
SathanurDam 2017 10 10

சென்னை, சாத்தனூர் அணையிலிருந்து இன்றிரவு அல்லது நாளைக்குள் தண்ணீர் திறக்கப்படுகிறது. தென் பெண்ணையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கிராமம் வழியாக பாய்ந்து ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், தொடர் கன மழை காரணமாக, கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி.அணை நிரம்பியது. அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, சாத்தனூர் அணை நீர்மட்டம் 116.65 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் 6,799 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 3,645 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், 2 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்பெண்னை ஆற்றை செறிவூட்டவும், விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட தேவைக்காகவும் கடந்த மாதம் 25-ந் தேதி காலை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து மின்சார உற்பத்தி பாதை வழியாக தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 30 -ந் தேதிக்கு பிறகு, நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து, அதிகரித்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று மதியற்குள், 117 அடியை தாண்ட வாய்ப்புள்ளது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து இன்றிரவு தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீர் திறக்கப்பட்டால், சாத்தனூர் அணையில் மின் உற்பத்தி தொடங்கும்.இதற்கிடையே, சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.இதனால், சாத்தனூர் அணை முன்பு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலை இருப்பதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என்று கலெக்டர் கந்தசாமி எச்சரித்துள்ளார்


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து