மெக்சிகோ சிறையில் கலவரம்: 13 கைதிகள் பலி

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      உலகம்
Mexico prison riot 2017 10 11

மெக்சிகோ : மெக்சிகோவில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் கைதிகள் 13 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, ”மெக்சிகோவின் நூவா லியோன் மாகாணத்திலுள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. போலீஸார் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முயன்று அவர்களால் தடுக்க முடியவில்லை. இந்த மோதலில் கைதிகள் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்றார்.

தகவலை அறிந்த கைதிகளின் பெற்றோர்கள் சிறைச்சாலைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து