போர் பதற்றங்களுக்கு இடையே தனது காதலிக்கு முக்கிய பதவி கொடுத்த வட கொரிய அதிபர் !

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      உலகம்
Kim-Jong-un-Wife-Girlfriend-Hyon-Song-wol 2017 10 11

புதுடெல்லி : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது காதலி மற்றும் சகோதரிக்கு ஆளும் கட்சியில் முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார்.

அமெரிக்காவுடன் போர் பதற்றம் நிலவும் நிலையில் இந்த மாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார். ஹையோன் சாங்-வோல் என்ற பிரபல பின்னணி பாடகியும் கிம் ஜாங் உன்னும் ரொம்பவே க்ளோசாக இருந்ததாக பேச்சு உண்டு. தற்போது, ஹையோனுக்கு சுமார் 40 வயது இருக்கும். ஆனால், 2013ம் ஆண்டில் ஹையோனை சுட்டுக்கொல்ல கிம் ஜாங் உன் ஆணையிட்டு, அது நிறைவேற்றப்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் அப்போது வலம் வந்தது.

வட கொரியா என்பது ஒரு இரும்புத்திரை போட்ட நாடு என்பதால் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் வெளி உலகிற்கு முழுமையாக தெரிவதில்லை. எனவே வதந்திகள் றெக்கை கட்டி பறப்பது வழக்கம். கிம் ஜாங் உன் அவரை கொன்றார், இவரை கொன்றார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களிலும், சில நேரங்களில் முன்னணி மீடியாக்களிலுமே செய்திகள் வெளியாவது உண்டு.


விளக்கம் அளிக்க யாரும் முன்வராதது இதுபோன்ற வதந்திகளுக்கு முக்கிய காரணம். இதேபோலத்தான் ஹையோன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதும் வதந்தி என்பது இப்போது கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பு இதுதான்.. வட கொரியாவின் ஆளும் கட்சியான, ஒர்க்கர்ஸ் பார்ட்டியின் மத்திய கமிட்டியில் ஹையோனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஹயோன் தனது உடலுறவு காட்சிகளை இணையத்தில் விற்பனை செய்ததாகவும், இது வட கொரியா சட்டத்திற்கு எதிரானது என்பதால் அவரை சுட்டுக் கொல்ல கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார் என்றும் முன்பு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஹயோன் இன்னும் உயிரோடுதான் இருப்பதும், அவர் கிம் ஜாங் உன்னின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர் என்பதும், புது உத்தரவு மூலம் தெளிவாகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக போர் பதற்றம் நிலவும் சூழலில் தனது காதலிக்கு, ஆளும் கட்சியில், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம்மிக்க பதவியை கிம் ஜாங் உன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆளும் கட்சியில் தனது சகோதரிக்கும் முக்கிய பதவியை கிம் ஜாங் உன் வழங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து