கடைசி டி-20 போட்டி: தொடரை வெல்லப் போவது யார்? இந்திய - ஆஸி. அணிகள் இன்று மோதல்

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      விளையாட்டு
last t20 Ind vs Aus 2017 10 12

ஐதராபாத் : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இரு அணிகளும் தொடரை வெல்லப்போகும் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. ஒருநாள் தொடரை வென்ற விராட்கோலியின் அணி 20 ஓவர் தொடரையும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.


கவுகாத்தி போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதை சரி செய்தால் தான் இன்றைய ஆட்டத்தில் வெல்ல முடியும். இதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து கடுமையாக போராடினால் தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இயலும். ஜேசன் பெரென்டோர்ப் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார். இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் பயணத்தை முடிக்கும் நம்பிக்கையில் உள்ளது. இரு அணிகளும் இன்று மோதுவது 16-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 15 ஆட்டத்தில் இந்தியா 10-ல், ஆஸ்திரேலியா 5-ல் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா:

வீராட்கோலி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, கேதர் ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹால், பும்ரா, ராகுல், அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், நெக்ரா.

ஆஸ்திரேலியா:

வார்னர் (கேப்டன்), ஆரோன்பிஞ்ச், டிரெவிஸ் ஹெட், ஹென் ரிக்ஸ், மேக்ஸ்வெல், கிறிஸ்டியன், டிம்பெய்ன், நாதன் கோல்ட்டர், ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ், பெரென்டோர்ப், ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

64 ஆண்டுகளுக்கு பின்...

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

சற்று புதுமையானது

விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

பெண்களின் மூளை

‘அல்சமீர்’ எனும் மறதி நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. எல்லா செயல்களிலும் மிகவும் உறுதியாக உள்ளதும், மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது சில பாதிப்புக்குள்ளாகுவதும் தெரியவந்துள்ளது.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

இங்கிலாந்து பவுண்ட்ஸ்

இங்கிலாந்து வங்கி திங்களன்று ஒரு ட்வீட் மூலம் புதிய 5 பவுண்டு நோட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat) இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.இதை தொடர்ந்து சைவ உணவு உண்பவர்கள் பெரும் காட்டம் அடைந்துள்ளனர். அந்த நோட்டுகளை நீக்க வேண்டும் என ஒரு மனுவில் இது வரை சுமார் 19,000 பேர் கையெழுத்திட்டு வங்கியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

அதிசய சிறுமி

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற குழந்தை 3 காலுடன் பிறந்தது. இடுப்புடன் இணைந்த 3-வது கால் இருந்ததால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் சோய்டியால் நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டத்துக்கும் கீழே...

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

மனிதனுக்கு போட்டியாக...

லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடியது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நில முத்திரை

நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது. எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும்.  தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது. எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை செய்தால் சில நிமிடங்களிலேயே தூக்கம் கண்களை தழுவும்.