முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை ஹாக்கி 2-வது லீக்: இரும்பானது இந்தியா துரும்பானது வங்கம்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

டாக்கா: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடந்த போட்டியில் 7- 0 என்ற கணக்கில் வங்கதேசத அணியை பந்தாடியது இந்திய அணி.

8 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்கா நகரில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தியா தனது 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் நேற்று வங்காளதேசத்தை சந்தித்தது. மாலை 5.30 மணிக்கு இப்போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் முதல் அபாரமாக ஆடிய இந்திய அணி, வங்கதேசத்தை 7 - 0 என்ற கோல் கணக்கில் வீழத்தி அபார வெற்றி பெற்றது. நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து