முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித் ஷா மகன் ஜெய்ஷா விசாரிக்கப்பட வேண்டும்: ஆர்.எஸ். எஸ் அமைப்பின் தலைவர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 14 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

போபால்: பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் தொழில் வளர்ச்சி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் முக்கிய தலைவரான தத்தாத்ரேயா ஹோசபல் கூறியுள்ளார். ஜெய்ஷா மீதான புகாரை பாஜக தலைவர்கள் பலரும் மறுத்துள்ள நிலையில் ஹோசபல் கருத்து சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

பாஜவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம், ம.பி. தலைநகரான போபாலில் தொடங்கியது. மூன்று நாட்களுக்கான இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளர் ஹோசபல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஜெய்ஷாவின் வளர்ச்சி குறித்த புகார் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஹோசபல் பதில் அளிக்கும்போது, "முதல்கட்ட விசாரணையில் தவறு நடந்ததாகத் தெரியவந்தால் அப்பிரச்சினையில் அரசு விசாரணை நடத்த வேண்டும். மற்றவர்களின் ஊழல் மீது நடத்தியதை போல் இதிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

ஜெய்ஷாவின் தொழில் அபரீதமான வளர்ச்சி பெற்றிருப்பதாக ‘தி வையர்’ என்ற செய்தி இணையதளம் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதை மறுத்த ஜெய்ஷா, ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அந்த இணையதளத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ள இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் ஜெய்ஷாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், ஜெய்ஷா விவகாரத்தில் விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்றாவது முக்கிய தலைவராகக் கருதப்படும் ஹோசபல் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில், 50 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சமீபத்தில் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஆர்எஸ்எஸ் தேசிய நிர்வாக உறுப்பினர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து