முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிப் படையின் இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

ஜோங்லி: தெற்கு சூடானில் முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப் படையின் இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படை சார்பில் 50 இந்திய வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.நா. அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருக்கும் மக்களை இந்திய வீரர்கள் இரவு பகலாகப் பாதுகாத்து வருகின்றனர். அமைதியை நிலைநாட்ட அயராது பாடுபட்டு வருகின்றனர். இதை பாராட்டி ஐ.நா. சபை சார்பில் இந்திய வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஐ.நா. அமைதிப் படை கமாண்டர் பிராங்க் பேசியபோது, இந்திய வீரர்களின் வீரத்துக்கும் திறமைக்கும் ஈடு இணையில்லை. தெற்கு சூடானின் ஜோங்லி பகுதியை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்று புகழாரம் சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து