கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க ஏடிஸ் கொசுப்புழுக்களை அப்புறப்படுத்தும் பணி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      கடலூர்
cuddalore collector visit dengu avoid works 2017 10 19

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அலுவலகங்களிலும், வளாகத்திலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   அப்புறப்படுத்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்புறப்படுத்தும் பணி

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் அங்குள்ள உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றினை அப்புறப்படுத்தும் பணியினை கலெக்டர்  மேற்கொண்டார். இப்பணிகள் வாரந்தோறும் வியாழக்கிழமை மேற்கொள்ளவேண்டும்.அதன்பேரில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் சேமிக்கும் தொட்டியினை கலெக்டர்  பார்வையிட்டு அவ்வப்போது தண்ணிர் தொட்டியினை சுத்தம் செய்து அலுவலக பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனவும், மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பதிவறையினை பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆண்டுகள் குறிப்பிட்டு சரியான முறையில் அடிக்கிவைத்து பராமரிக்கவேண்டும் எனவும் பதிவறை எழுத்தருக்கு அறிவுரை வழங்கினார். அலுவலக வளாகத்தில் உள்ள உபயோகமற்ற பொருட்களான விளம்பரப்பலகைகள், டயர்கள், டீ.கட்புகள், வாட்டர் பாட்டில்கள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றினை உடடினயாக அப்புறப்படுத்துவதால் ஏடிஸ் கொசுப்புழு உருவாகாமல் தடுப்பதோடு டெங்கு காய்ச்சல் பரவாமலும் தடுக்கலாம் என தெரிவித்தார்.மேலும், இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுவலர் தலைமையில் இத்துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகள் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும்  மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நல்ல நீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட இவ்வகை கொசுப்புழுக்கள் சேமித்து வைக்கப்படும் நீர் ஆதாரங்கள், தொட்டிகள், பயனற்ற டயர்கள்,   வீடுகளில்  உபயோகமற்ற பயனற்ற நிலையில் வீசி எறியப்படும் தேவையற்ற பொருட்கள்  ஆட்டுறல்கள், கப்புகள், உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து அதன் மூலம் கொசுப்புழுக்கள் உண்டாகி டெங்கு காய்ச்சலுக்கு  வாய்ப்பாக அமைகிறது.   எனவே இதனை  கருத்தில்  கொண்டு  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணி முதல்  11 மணி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை டெங்கு கொசுப்புழு (லார்வா) ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட  உள்ளது.  அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரகம் முதல் கல்வி நிலையங்கள் மற்றும்  ஊட்டச்சத்து மையங்கள் வரையிலான அனைத்து துறை சார் அலுவல வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீர் அப்புறப்படுத்துதல், தேவையற்ற கொசுப்புழு உற்பத்திக்கு சாதகமான பொருட்கள் ஆகியவற்றை அனைத்து அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்துதல் மற்றும் அழித்தல்  பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  இப்பணிகள் அரசு அலுவலக வளாகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள், கட்டிடங்கள், தொழிலகங்கள் ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதே போன்று அனைத்து கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் ஆகியவற்றிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  அனைத்து கல்வி நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாக சாதகமான அம்சங்கள், அதனை அழிக்கும் யுக்திகள் குறித்து கல்வி நிறுவன தலைவர்கள், தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மேலும்  அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள்  இறைவணக்கத்தின் போது  பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ மாணவிகளுக்கு  டெங்கு காய்ச்சல் பரவல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும்.   தொடர்ந்து குடிநீர் ஆதாரங்கள் சுத்தம் செய்தல், நீர் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை கழுவி தூய்மை படுத்துதல், குளோரினேஷன் பணிகள் போன்றவையும்  ஒட்டுமொத்த குழுப்பணிகளாக மேற்கொள்ளப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவயிhளர் (வேளாண்மை) கிருபாகரன், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலச்சந்தர் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து