முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் குண்டாறு வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைப்பதற்கான பணிகள் குறித்து ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு:

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள குண்டாறு வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைப்பதற்கான பணிகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு குண்டாறு வடிநில மேம்பாட்டு திட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்திலுள்ள கடலில் கலந்திடும் ஆறுகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது.திருமங்கலம் நகர் வழியாக சென்றிடும் இந்த ஆற்றிலிருந்து வடகரை பகுதி விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு சென்றிடும் வடகரை பாசன கால்வாய் உள்ளது.தற்போது இந்த வடகரை பாசன கால்வாயில் செடிகொடிகள் வளர்ந்து தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் குண்டாறு வடகரை பாசன கால்வாயை தூர்வாரி சீரமைத்திட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும்,வடகரை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்கி பல்வேறுவிதமான நோய்கள் பரவுவதை தடுத்திட வேண்டும் என திருமங்கலம் நகர்ப்பகுதி மக்களும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குண்டாறு வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைப்பதற்கான பணிகள் குறித்து திருமங்கலம் நகர் குண்டாறு அனுமார் கோவில் பகுதி மற்றும் காட்டுப்பத்திரகாளி கோவில் செல்லும் பாலம் அமைந்துள்ள பகுதிகளிலும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது குண்டாறு வடகரை கால்வாயில் செடிகொடிகள் முளைத்து தண்ணீர் செல்ல வழியில்லாத வகையில் இருப்பதை நேரில் கண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், குண்டாறு வடகரை கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைத்து நோய்கள் பரவுவதை தடுத்திடும் வகையிலும்,பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து குண்டாறு வடிநில மேம்பாட்டு திட்ட பொதுப் பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது புதிதாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அதனடிப் படையில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு குண்டாறு வடகரை கால்வாயை விரைவில் தூர்வாரி சீரமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கல்லுப்பட்டி யூனியன் முன்னாள் துணைச் சேர்மன் பாவடியான்,திருமங்கலம் நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம், குண்டாறு வடிநில மேம்பாட்டு திட்ட செயற் பொறியாளர் லீலாவதி,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி,நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து