முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரியா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற செபாஸ்டியன் குர்ஸ் உலகின் இளம் தலைவராகிறார்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வியன்னா: ஆஸ்திரிய நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 31 வயதான செபாஸ்டியன் குர்ஸ், உலகின் இளம் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இவர் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குர்ஸின் மக்கள் கட்சி 31.5 சதவீத இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றது. அடுத்ததாக சமூக ஜனநாயகக் கட்சி 26.9 சதவீத  இடங்களைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய யூனியனைக் கடுமையாக விமர்சித்து வரும் சுதந்திரக் கட்சி 26 சதவீத இடங்களைப் பெற்றது.

தற்போது செபாஸ்டியன் குர்ஸ் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி, அரசை அமைக்க உள்ளார்.

இதுகுறித்துப் பேசிய செபாஸ்டியன், ''நான் புதிய அரசியல் கலாச்சாரத்தை விரும்புகிறேன். அதன்மூலம் தைரியமும் உறுதியும் மிக்க ஆஸ்திரிய அரசாங்கத்தை அமைக்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து