முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராசக்தி படம் இப்போது வந்தால் எப்படி இருக்கும்? பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: மெர்சல் படத்தை விமர்சித்து வரும் பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘பராசக்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருந்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும்’’ என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

‘‘பா.ஜ.கவினர் மெர்சல் படத்தைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். பராசக்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். சினிமா தயாரிப்பாளர்களே விழிப்புடன் இருங்கள். இனி, அரசின் கொள்கைகளைப் புகழ்ந்து ஆவணப்படங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்.
ப.சிதம்பரம்

விஜய் நடித்த ‘மெர்சல்’ மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி வரி பற்றிய வசனத்திற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.

பா.ஜ.க.வினரின் இந்தக் கோரிக்கையை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘‘பா.ஜ.கவினர் மெர்சல் படத்தைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். பராசக்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

சினிமா தயாரிப்பாளர்களே விழிப்புடன் இருங்கள். இனி, அரசின் கொள்கைகளைப் புகழ்ந்து ஆவணப்படங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்” எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து