முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் 31-வது ஒருநாள் சதத்துடன் 280 ரன்களை எடுத்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். கடும் வெயிலிலும், ஈரப்பதத்திலும் ஐஸ் பேக்குகளுடன் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் நன்றாக வீசினர்.
விராட் கோலி 29 ரன்களில் இருந்த போது அவருக்கு சாண்ட்னர் கைக்கு வந்த எளிதான கேட்சைக் கோட்டை விட்டார். முன்னதாக களவியூகம் சரியாக இல்லாததால் கோலியின் இரண்டு எட்ஜ்களும் விரயமாயின. பிறகு கடைசியிலும் 88 ரன்களிலிருந்து 96 ரன்களுக்குச் செல்லும் போது இரண்டு எட்ஜ்களே உதவின. அவர் 31-வது ஒருநாள் சதத்தை எடுக்க இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்களை எடுத்தது.

ஷிகர் தவண், ஒரு மிக அருமையான கவர் பவுண்டரியுடன் தொடங்கினார். 9 ரன்கள் எடுத்திருந்த போது அவரது வழக்கமான, இன்னும் திருத்திக் கொள்ளாத பலவீனமான, ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பந்தை வீசி இன்னும் வெளியே ஸ்விங் செய்தார் போல்ட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் லேதமிடம் கேட்ச் ஆகி ஏமாற்றமளித்தார். ரோஹித் சர்மாவும் அருமையான ஒரு பவுண்டரி மூலம் தொடங்கினார்.

பிறகு சவுதீ ஏதோ ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் பலவீனம் என்று நினைத்துக் கொண்டு இரண்டு லெக் ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை வீசி 2 சிக்சர்களை வாங்கிக் கட்டிக்கொண்டார். ஆனால் இந்த 2 ஷார்ட் பிட்ச் பந்துமே நல்ல பந்துகள் ஏனெனில் பெரிய மைதானமாக இருந்திருந்தால் ரோஹித் சர்மா முதல் ஷாட்டிலேயே கேட்சில் வெளியேறியிருப்பார்.

ரோஹித் இன்றைக்கு என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை, கொஞ்சம் தெனாவட்டாக ஆடியது போல்தான் இருந்தது, போல்ட்டின் அடுத்த ஓவரில் திடீரென மேலேறி வந்து விளாச நினைத்து ஏமாந்தார். பந்து கால்காப்பைத் தட்டி விக்கெட் கீப்பரிடம் சென்றது, ரிவியூ செய்யலாமா என்று கூட நினைத்தது நியூசி. ஆனால் இது 'நாட் கிரிக்கெட்' ஷாட் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த பந்தே இதைவிட மோசமான டி-20 ஸ்லாக்கில் இன்னொரு 'நாட் கிரிக்கெட்' ஷாட்டை ஆடி ரோஹித் சர்மா நல்ல பந்தில் பவுல்டு ஆனார். 7 பந்துகளில் 4 தவறுகளைச் செய்கிறார் என்றால் அது ஈகோவினால்தான் என்பது தெள்ளத் தெளிவு, அவரது ஈகோவுக்கு சரியான பாடம் கற்பித்தார் டிரெண்ட் போல்ட்.  71/3 (16) என்ற நிலையில் கோலியுடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். 4 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இவரும் கோலியும் இணைந்து 80 பந்துகளீல் 73 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து