முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி 6 - மத்திய அரசு வரும் ஜனவரி முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க திட்டமிட்டு வருகிறது.

நாடுமுழுவதும் விற்கப்படும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் முத்திரையிடப்படுகிறது. பி.ஐ.எஸ். முத்திரை, நேர்த்தித்தன்மை முத்திரை உள்ளிட்ட ஐந்து தர அடிப்படையில் இந்த முத்திரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:

''பெரும்பாலும் தங்க நகைகள் வாங்குவோர் தற்போது அவற்றின் தரத்தை அறியாமல் வாங்கும் நிலையே உள்ளது. சில நகைகடைகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகைகளை விற்பனை செய்கின்றன. எனவே மக்கள் தரமான தங்க நகைகள் வாங்குவதை உறுதி செய்யும் வகையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் ஆக்கப்படும்.

வரும் ஜனவரி முதல் அமல்படுத்த பரிசீலித்து வருகிறோம். இது அமலுக்கு வந்த பின், 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் ஆகிய மூன்று பிரிவுகளில் ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகைகள் விற்பனை செய்ய வகை செய்யப்படும்'' என ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து