குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் ரூ.27.20 கோடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது: கலெக்டர் சு.கணேஷ், தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      புதுக்கோட்டை
5 a

 

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வேளாண்மைக்கல்லூரி கட்டட கட்டுமானப்பணிகளை கலெக்டர் சு.கணேஷ், 03.11.2017 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய கட்டிடம்

 

இந்த ஆய்வின் போது கலெக்டர் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிர்வாக கட்டடம், ரூ.6.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி கட்டடம், ரூ.4.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதி கட்டடம், ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பண்ணை அலுவலகம் மற்றும் பயன்பாட்டு கட்டடங்கள்;, வளாக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பண்ணை கட்டமைப்பு வசதிகள், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு செயல்திறன் அமைப்பு கட்டமைப்பு வசதிகள்; என மொத்தம் ரூ.27.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டட கட்டுமானப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கட்டுமானப்பணிகளில் தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு பணிகளை மேற்கொள்ளவும், மேலும் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சு.கணேஷ், உத்தரவிட்டார்.

இந்தஆய்வில் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர்.கே.சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் எஸ்.செல்லமணி, உதவி பேராசிரியர் ந.ஆனந்தராஜா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து