வடகொரியாவின் சர்வாதிகாரியை தடுக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது: டிரம்ப்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      உலகம்
trump 2017 10 12

டோக்கியோ, வடகொரியாவின் சர்வாதிகாரியை தடுக்க வேண்டும் என்று தென்கொரிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 11 நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் சென்ற அதிபர் டிரம்ப் அங்கு ஜப்பான் - அமெரிக்க இரு நாடு உறவு குறித்து ஆலோசித்ததுடன் தொடர்ந்து அத்துமீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்திவரும் வடகொரியாவுடன் இனியும் பொறுமையை கடைபிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள டிரம்ப் நேற்று  சியோலில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் இணைந்து, போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தென்கொரிய - அமெரிக்க ராணுவப் படைகளை ஆய்வு செய்தார்.


அதன் பின் வீரர்களுடன் விருந்தில் பங்கேற்று டிரம்ப் உரையற்றினார்.இதனையடுத்து டிரம்பும், மூன் ஜே இன்னும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர் அதில் டிரம்ப் பேசும்போது,உயிர்களை அச்சுறுத்திவரும் வடகொரியாவின் சர்வாதிகாரியை தடுக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது'' என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து