கட்டப்பஞ்சாயத்தை தடுக்காவிட்டால் வக்கீல் தொழிலை யாரும் காப்பாற்ற முடியாது: ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கவலை

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      தமிழகம்
highcourt chennai 2017 09 06

சென்னை,  கட்டப்பஞ்சாயத்தை தடுக்காவிட்டால் வழக்கறிஞர் தொழிலை யாரும் காப்பாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார், அரசு துறையில் ஓய்வுபெற்றவர்கள் வக்கீலாக பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கெடு விதித்துள்ளார். வழக்கறிஞர் தொழிலை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கட்டப்பஞ்சாயத்தை தடுக்காவிட்டால் வழக்கறிஞர் தொழிலை காப்பாற்ற முடியாது என்றும் நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்தார்.வழக்கறிஞர் தொழிலை நாமே காப்பாற்ற முடியாவிட்டால் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் கல்லூரிக்கே செல்லாமல் சட்டம் படிப்பதால்தான் வழக்கறிஞர் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து அதிகமானது என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து