அத்வானிக்கு 90-வது பிறந்தநாள் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
modi 2017 09 02

புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேற்று  (நவம்பர் 8- ம்தேதி) 90 வது பிறந்தநாளாகும். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.அத்வானி தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த வருடம் அவரது மனைவி கமலா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அத்வானி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இந்த  ஆண்டு அவரது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அவர்கள் மத்தியில் எல்.கே.அத்வானி  பிறந்தநாளை கொண்டாடினார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அவர் பிரிதிவிராஜ் சாலையில் உள்ள தனது வீட்டிற்கு பார்வையற்ற குழந்தைகளை  வரவழைத்து இருந்தார்.  90 பார்வையற்ற சிறுவர் சிறுமியுடன் அமர்ந்து அவர் காலை உணவு உட்கொண்டார். இதன் மூலம் அத்வானி தொடர்ந்து உற்சாகமாக இருப்பதை  உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்வானிக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த இனிய நாளில் நீங்கள் நல்ல உடல் நலம் பெற்று நீண்டநாட்கள்  ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். கடின  உழைப்பு மூலம் இந்த நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர் அத்வானி என்று தனது டிவிட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து மனைவி இறந்தபின்பு ஒதுங்கியிருந்த அத்வானி  கடந்த தீபாவளி அன்று வாரணாசி சென்று 90 தீபங்கள் ஏற்றி வழிபட்டார் . அப்போது முதல் அவர் உற்சாகமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து