கேரள சட்டசபையில் சோலார் பேனல் வழக்கின் அறிக்கை தாக்கல்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
Pinarayi Vijayan new(N)

திருவனந்தபுரம்: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில், கேரள சட்டசபையில்  சோலார் பேனல் வழக்கின் அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், ''முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சோலார் பேனல் ஊழல் மூலம் மக்களை ஏமாற்ற முயன்றது அறிக்கையில் தெரிய வந்துள்ளது'' என்றார்.

இந்நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், சட்டசபையில்  அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன், தகவல்களை வெளியிட்டு, முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையின் மாண்பைக் குலைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டின.


கேரளாவில் முந்தைய உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தும் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க 2013 அக்டோபர் 23-ல் ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது.

கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, முன்னாள் மின் துறை அமைச்சர் ஆர்யாடன் முகமது ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் அவர் பாலியல் புகார் அளித்தது கேரளாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன், 4 பாகங்களை கொண்ட அறிக்கையை சில வாரங்களுக்கு முன்பு, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து