முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஏ.ஜி. மில்கா சிங் காலமானார்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      விளையாட்டு
A G Milkha Singh 2017 11 10

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏ.ஜி. மில்கா சிங் தனது 75 வயதில் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.

1960-களில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஏ.ஜி. மில்கா சிங். இவர் இந்திய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 75 வயதாகும் இவர், நேற்று மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இவரது இறுதிச் சடங்கு இன்று நடக்க இருக்கிறது. இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மில்கா சிங்கின் மூத்த சகோதரர் கிரிபால் சிங்கும் இந்திய அணியில் விளையாடிவர். இவர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருவரும் இணைந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிள்ளனர். இடது கை பேட்ஸ்மேன் ஆன மில்கா சிங் சிறந்த பீல்டர். 17 வயதில் ரஞ்சி டிராபியில் அறிமுகமான இவர், 18-வது வயதில் தனது பிறந்த நாள் அன்று டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 8 சதங்களுடன் முதல்தர போட்டியில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து