பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      கோவை
conv2

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஆ.கணபதி  தனது வரவேற்புரையில் 2016-17 பல்கலைக்கழகத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கூறினார். அவர் ‘‘சென்ற 2015-16 ஆண்டில் உலக அளவில் 1191 வது இடத்திலும். இந்திய அளவில் 23 வது இடத்திலும் இருந்த பாரதியார் பல்கலைக்கழகம் 2016-17 ஆண்டில் உலக அளவில் 1049 வது இடத்தையும். இந்திய அளவில் 18 வது இடத்தையும் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது’’ என்றார்.

நிறைவாக ஆளுநர் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். விழாவில் 2 நபர்களுக்கு இலக்கிய முதுமுனைவர் பட்டமும், 549 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 1925 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும்  மொத்தம் 84,408 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர், உயர் கல்வித்துறை செயலர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து