விருத்தாசலம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      கடலூர்
awerness notice issue by railway police

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பண்டிகைகாலங்களில் ரயில் வண்டிகளில்ஏற்படும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடர்கள் தங்கள் உடைமைகளை திருடுவதற்கு உடன் பயணம் செய்வார்கள்.

துண்டு பிரசுரம் விநியோகம்

ஆகவே தாங்கள் உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களை பொருட்களை ஒப்படைத்துவிட்டு எழுந்து செல்லாமலும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனே அவரச உதவி எண் 1512, 9962500500 மற்றும் உதவி ஆய்வாளர் 9498109145 என்ற எண்ணில் உடனே தொடர்பு கொள்ளவும், பொருட்களை தங்கள் கண் பார்வையிலேயோ பொருட்களை வைத்துக்கொள்ளவும் பெண் பயணி தங்கள் ஆபரணங்களை (நகைகள்) வெளியே தெரியாவண்ணம் மூடியும், பின் மாட்டியும் அணிந்துகொள்ள வேண்டும் எனவும் ஓடும் வண்டியில் ஏறவே இறங்கவோ கூடாது எனவும் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முற்படும் போது இறுபுறமும்கவனிக்கவேண்டும் எனவும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் பட்டாசுகள் எடுத்துச்செல்லக்கூடாது எனவும், அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பாணங்கள் உணவுப்பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. உதவி ஆய்வாளர் திருமாவளவன் மற்றும் ரயில்வே காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து