முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகியாக இந்திய அழகி தேர்வு

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் தேர்வாகியுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் (வயது 20), இந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் டாக்டர்கள். டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் சோன்பேட் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

இந்திய அழகி பட்டம் வென்றதை தொடர்ந்து, உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்நிலையில், சீனாவின் சானியா நகரில் நடந்த, 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் உலக அழகி பட்டத்தை வென்றார். இதில் உலகம் முழுவதும் இருந்து 118 பேர் பங்கேற்றனர். மெக்ஸிகோ அழகி இரண்டாவது இடத்தையும், இங்கிலாந்து அழகி மூன்றாவது இடத்தையும் பிடித்னர்.

2000மாவது ஆண்டில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பின் 17 ஆண்டுகளுக்கு பின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். உலக அழகி பட்டம் வெல்லும் 6வது இந்திய பெண் மனுஷி சில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து