முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர்,  குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அம்மாநில பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

வருகிற டிசம்பர் 9ம் தேதி மற்றும் 14ம் தேதிகள் குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுவரை பா.ஜ.க இரண்டு வேட்பாளர் பட்டியலையும், காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.,வின் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 28 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. 182 சட்டசபை தொகுதிகள் அடங்கிய குஜராத்தில், பா.ஜ.க இதுவரை 134 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் 77 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து